நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்

நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்

எழுத்தாளர் Bella Dalima

27 Jul, 2017 | 9:57 pm

பணிப்பகிஷ்கரிப்பினாலோ, சதித்திட்டங்களைத் தீட்டியோ, அத்தியாவசிய சேவைகளைக் குழப்பியோ அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவை குழப்பப்படுவதை நிறுத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளைக் குழப்புவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதுடன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என தாம் முன்னெச்சரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

”சரியான தீர்மானங்களை எடுக்க முடியாவிட்டால் அது அரசாங்கத்தின் பலவீனமே. எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் எதிர்க்கட்சியின் இடையூறுகள் அதிகரிக்கும். வினைத்திறனான முறையில் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்,” என பாராளுமன்றத்தில் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

பெட்ரோலியத்துறை ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டது.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்