நாடு பூராகவும் 30 இலட்சம் லீற்றர் எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

நாடு பூராகவும் 30 இலட்சம் லீற்றர் எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

நாடு பூராகவும் 30 இலட்சம் லீற்றர் எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2017 | 10:04 am

நள்ளிரவு முதல் 30 இலட்சம் லீற்றர் எரிபொருளை நாடு பூராகவும் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தை இன்று மாலைக்குள் ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டார்.

கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோலியத்துறை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.

ஹம்பாந்தோட்டை எண்ணெய்த் தாங்கி தொகுதியை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக பொது மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டது.

இதனையடுத்து எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாகக் கருதி, நேற்று முன்தினம் இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து, கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய தொகுதிகளுக்கு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த பெற்றோலியத்துறை ஊழியர்கள் நேற்று பிற்பகல் முதல் மீண்டும் பணிக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.

எனினும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஏற்கனவே ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலைமையின் கீழ், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தற்போது வழமைக்குத் திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்