கொடிகாமத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல்

கொடிகாமத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2017 | 10:47 am

யாழ். கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

நெல்லியடி பொலிஸ் பிரிவின், கரம்பான்வெளி பகுதியில் நேற்றிரவு 7.30 அளவில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், சிலரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடமை முடிந்து பொலிஸ் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் மணல் ஏற்றிச் சென்றபோது பருத்தித்துறை பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் ஊரான துன்னாலைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்