கடந்த வருடத்தில் பிராந்திய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட மூலதன செலவீனங்கள் தொடர்பில் கணக்காய்வு

கடந்த வருடத்தில் பிராந்திய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட மூலதன செலவீனங்கள் தொடர்பில் கணக்காய்வு

கடந்த வருடத்தில் பிராந்திய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட மூலதன செலவீனங்கள் தொடர்பில் கணக்காய்வு

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2017 | 8:56 am

கடந்த வருடத்தில் பிராந்திய ரீதியாக முன்னெடுக்கப்பட்ட 200 இற்கும் அதிகமான மூலதன செலவீனங்கள் தொடர்பில் கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் சுமார் 622 பில்லியன் ரூபா பெறுமதியான மூலதன செலவீனங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க குறிப்பிட்டார்.

இது தொடர்பாக 50 வீதமான கணக்காய்வுகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள கணக்காய்வுகளின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட செலவீனங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி, விசாரணைகளை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய மூலதன செலவீனங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாத்தளை, பொலன்னறுவை, பதுளை, எம்பிலிப்பிட்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மூலதன செலவீனங்களில் அதிகளவிலான முறைகேடுகள் பதிவாகியுள்ளன.

முன்னெடுக்கப்பட்டுள்ள சகல மூலதன செலவீனங்கள் தொடர்பாகவும் கணக்காய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி அறிக்கையை விரைவில் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்தார்.

இந்த கணக்காய்வு விசாரணைகளுக்காக எட்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்