அபோகலிப்டோ பாணியில் உருவாகும் புதிய படம் ”ஆறாம் வேற்றுமை”

அபோகலிப்டோ பாணியில் உருவாகும் புதிய படம் ”ஆறாம் வேற்றுமை”

அபோகலிப்டோ பாணியில் உருவாகும் புதிய படம் ”ஆறாம் வேற்றுமை”

எழுத்தாளர் Bella Dalima

27 Jul, 2017 | 4:22 pm

அபோகலிப்டோ (Apocalypto) பாணியில் தமிழில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது.

இப்படத்தை ஹரி கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார்.

செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் `ஆறாம் வேற்றுமை’.

இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கோபிகா என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார்.

யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், ‘பரதேசி’ பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

”இந்தப்படம் இன்றைய காலகட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம். ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் `ஆறாம் வேற்றுமை’ என பெயர் வைத்தோம். தங்களுக்கு என்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம்,” என இயக்குனர் ஹரி கிருஷ்ணா கூறியுள்ளார்.

”ஓர் இடம், ஓர் இனம் என வாழத்தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ஆறாம் வேற்றுமை. மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் தான் இது,” எனவும் இயக்குனர் கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு `ரேணிகுண்டா’ பட புகழ் கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்