அத்தனகல்ல நீதிமன்றத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

அத்தனகல்ல நீதிமன்றத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

அத்தனகல்ல நீதிமன்றத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2017 | 2:04 pm

அத்தனகல்ல நீதவான் நீதிமன்ற சிறைக் கூடத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

ஹெரோய்ன் போதைப்பொருள் தொடர்பில் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர், மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதை அடுத்து, சந்தேகநபர் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்