வௌ்ளை சுறாவிடம் தோற்றார் நீச்சல் மன்னன் மைக்கல் பெல்ப்ஸ்

வௌ்ளை சுறாவிடம் தோற்றார் நீச்சல் மன்னன் மைக்கல் பெல்ப்ஸ்

வௌ்ளை சுறாவிடம் தோற்றார் நீச்சல் மன்னன் மைக்கல் பெல்ப்ஸ்

எழுத்தாளர் Bella Dalima

25 Jul, 2017 | 5:03 pm

நீச்சல் உலகின் மன்னனாகத் திகழும் மைக்கல் பெல்ப்ஸிற்கும் கணினியால் உருவாக்கப்பட்ட சுறாமீனுக்கும் இடையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் சுறா மீன் வெற்றி பெற்றது.

கடலில் நடந்த 100 மீட்டர் நீச்சலில், பந்தய இலக்கை முதலில் எட்டுவதில் கணினியால் உருவாக்கப்பட்ட  சுறாவுக்கும் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸிற்கும் கடும் போட்டி நிலவியது.

வெள்ளை சுறா , 36.10 வினாடிகளில் இலக்கை எட்டியது.

ஒலிம்பிக்கில் 28 பதக்கங்களை வென்றுள்ள பெல்ப்ஸ், 38.10 வினாடிகளில் பந்தய தூரத்தை ‌எட்டினார்.

மனிதர்களின் சராசரி நீச்சல் வேகம் மணிக்கு 8 முதல் 10 கிலோ மீட்டராக உள்ளது.

ஆனால், வெள்ளை சு‌றா மீன்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வரை நீந்தும் ஆற்றல் பெற்றுள்ளன.

கணினியால் உருவாக்கப்பட்ட  குறித்த சுறாவுடன் மீண்டும் போட்டியில் பங்கேற்று, அதனை வீழ்த்த தயாராக இருப்பதாக பெல்ப்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்