விளக்கமறியலிலுள்ள சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சேவை இடைநிறுத்தம்

விளக்கமறியலிலுள்ள சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சேவை இடைநிறுத்தம்

விளக்கமறியலிலுள்ள சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சேவை இடைநிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 3:15 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் நேற்று (20) இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் பி.மனதுங்க தெரிவித்தார்.

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பி செல்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் லலித் ஜயசிங்க கடந்த 15 ஆம் திகதி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்