வித்தியா படுகொலை: உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீ கஜன் வௌிநாடு செல்ல தடை

வித்தியா படுகொலை: உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீ கஜன் வௌிநாடு செல்ல தடை

வித்தியா படுகொலை: உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீ கஜன் வௌிநாடு செல்ல தடை

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 4:06 pm

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவி புரிந்ததாகத் தெரிவிக்கப்படும் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீ கஜன் வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீ கஜனுக்கு வௌிநாடு செல்ல தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பதில் நீதவான், ஶ்ரீகஜன் வௌிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய, அவருடைய வௌிநாட்டு கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் தப்பிச் சென்றமைக்கு ஶ்ரீகஜன் உதவி புரிந்துள்ளதாக Trial at Bar மன்றில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 7 ஆம் திகதி ஸ்ரீ கஜன் வெளிநாடு செல்லும் பொருட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது, அவருக்கு விமான நிலையத்திலிருந்து வௌியேற அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரான ஶ்ரீகஜன் தனிப்பட்ட தேவைக்காக சென்னைக்கு செல்வதற்காக கடந்த 7 ஆம் திகதி விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

எவ்வாறாயினும், வௌிநாடு செல்வதற்காக முறையான அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்