மொனராகலையில் மூன்று வனப்பகுதிகளில் தீ பரவல்: சுமார் 150 ஏக்கர் அழிவு

மொனராகலையில் மூன்று வனப்பகுதிகளில் தீ பரவல்: சுமார் 150 ஏக்கர் அழிவு

மொனராகலையில் மூன்று வனப்பகுதிகளில் தீ பரவல்: சுமார் 150 ஏக்கர் அழிவு

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 3:40 pm

மொனராகலை மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 150 ற்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி அழிவடைந்துள்ளது.

மொனராகலை – கொடபோவ வனப்பகுதியில் நேற்று (20) தீ பரவியது.

தீயினால் கொடபோவயில் உள்ள மிக விசாலமான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் உதவி பெறப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், மொனராகலை – கலவல்ஆரம வனப்பகுதியில் பரவிய தீ காரணமாக அந்த பகுதியில் 20 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொனராகலை – மலிந்தலாவை பகுதியில் உள்ள வனப்பகுதியிலும் நேற்று தீ பரவியுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்