பாடசாலைகள், அரச நிறுவனங்களில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு

பாடசாலைகள், அரச நிறுவனங்களில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு

பாடசாலைகள், அரச நிறுவனங்களில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 10:29 pm

நாடளாவிய ரீதியிலான டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10 மணி தொடக்கம் 2 மணித்தியாலங்களுக்கு டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலணியின் டெங்கு ஒழிப்புத் திட்டத்தைப் பலப்படுத்துவதற்காக அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்திருந்தன.

நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தி குழுவினர், நாட்டின் பல பகுதிகளில் மக்கள் சக்தி செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

புத்தளம், தம்புள்ளை, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், கண்டி, ஹட்டன், இரத்தினபுரி, தங்காலை, மாத்தறை, மாவனெல்ல, காலி மற்றும் அம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸார், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பத்தரமுல்ல – செத்சிரிபால கட்டட வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது.

இதேவேளை, மாத்தறை – நுபே வேதானந்த ஆரம்ப பாடசாலையில் மக்கள் சக்தி டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மக்கள் சக்தி டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் கல்பிட்டி முனசிங்க மகா வித்தியாலயத்திலும் முன்னெடுக்கப்பட்டது.

இரத்மலானை – படோவிட்ட டெங்கு அபாய வலயத்திலும் டெங்கு ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்