நெற்றியில் வாள் குத்தி காயமடைந்தார் கங்கனா ரணாவத்

நெற்றியில் வாள் குத்தி காயமடைந்தார் கங்கனா ரணாவத்

நெற்றியில் வாள் குத்தி காயமடைந்தார் கங்கனா ரணாவத்

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 5:28 pm

நடிகை கங்கனா ரணாவத் சண்டைக்காட்சியில் நடித்தபோது நெற்றியில் வாள் குத்தி காயமடைந்துள்ளார்.

‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாவார்.

‘குயின்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

தற்போது ஜான்சி ராணி வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தமிழில் வானம் படத்தை எடுத்த கிரிஷ் இயக்குகிறார்.

மணிகர்னிகா படத்தில் நடிப்பதற்காக கங்கனா ரணாவத் வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளை எடுத்து வந்தார்.

இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வில்லன்களுடன் கங்கனா ரணாவத் வாள் சண்டை போடுவது போன்ற காட்சியைப் படமாக்கும் போது, கங்கனா ரணாவத் உண்மையான வாளைக் கையில் வைத்து சண்டை போட்டுள்ளார்.

அவரை எதிர்த்து சண்டையிட்டவரின் வாள் எதிர்பாராத விதமாக கங்கனா ரணாவத்தின் நெற்றியில் குத்தியது.

இதனால் நெற்றியில் இருந்து ரத்தம் கொட்ட கங்கனா ரணாவத் மயக்கமடைந்துள்ளார்.

படக்குழுவினர் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்துள்ளனர்.

நெற்றியில் அவருக்கு 15 தையல்கள் போடப்பட்டுள்ளன.

 

manikarnika


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்