துருக்கி மற்றும் கிரேக்கத் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி, 200 பேர் காயம்

துருக்கி மற்றும் கிரேக்கத் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி, 200 பேர் காயம்

துருக்கி மற்றும் கிரேக்கத் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி, 200 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 6:18 pm

துருக்கி மற்றும் கிரேக்கத் தீவுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கதால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளனர்.

கிரேக்கத் தீவுப் பகுதி மற்றும் துருக்கி கடற்கரைப் பகுதிகளில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் கிரேக்கத்திலுள்ள புராதன சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் பல பாதிப்படைந்துள்ளன.

இதில் 2 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியில் 70 பேர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்