திருகோணமலையில் 25 குளங்கள் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு

திருகோணமலையில் 25 குளங்கள் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 8:13 pm

திருகோணமலை மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டுள்ள 25 குளங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களிடம் இன்று கையளித்தார்.

ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ”சிறிசர பிவிசும்” திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்ட கந்தளாய் – கங்தலாவ 12 ஆம் பிரிவு குளம் மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் அணைக்கட்டுகள் புனரமைப்பு, வீதி அபிவிருத்தி, யானை வேலிகள் அமைத்தல், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளின் அபிவிருத்தி போன்றவற்றிக்காக 3 வருட காலத்திற்கு ”சிறிசர பிவிசும்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் இந்த வருடம் வழங்கப்பட்ட 1000 மில்லியன் ரூபாவில் 200 மில்லியனுக்கும் அதிக செலவில் திருகோணமலை மாவட்டத்தின் 25 குளங்களின் புனரமைப்பு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்