சீனி கொள்கலனில் கொக்கேய்ன்: கைதானவர்கள் போதை ஒழிப்புப் பிரிவில் வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்

சீனி கொள்கலனில் கொக்கேய்ன்: கைதானவர்கள் போதை ஒழிப்புப் பிரிவில் வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்

சீனி கொள்கலனில் கொக்கேய்ன்: கைதானவர்கள் போதை ஒழிப்புப் பிரிவில் வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 3:54 pm

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தின் சதொச களஞ்சியசாலைக்கு சீனி கொண்டுவரப்பட்ட கொள்கலனில் இருந்து கொக்கேய்ன் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் போதை ஒழிப்புப் பிரிவில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களும் நேற்று (20) இரவு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கொக்கேய்ன் தொகை கைற்றப்பட்டது.

கிடைத்த இரகசிய தகவலொன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இந்த போதைப்பொருள் கைற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சுங்க திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

கைப்பற்றப்பட்ட இந்த கொக்கேய்ன் சுமார் 320 மில்லியன் ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்