கொழும்பின் சில பகுதிகளில் 19 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 19 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 19 மணித்தியால நீர் வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 3:24 pm

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 11 மணி முதல் நாளை (22) மாலை 6 மணி வரையிலான 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், ஜயந்த விஜேசேகர மாவத்தை மற்றும் மாளிகாவத்தை ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அபதலையிலிருந்து எலிஹவுஸ் வரையான நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்