ஏறாவூர் இரட்டைப் படுகொலை: சந்தேகநபர்கள் அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏறாவூர் இரட்டைப் படுகொலை: சந்தேகநபர்கள் அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏறாவூர் இரட்டைப் படுகொலை: சந்தேகநபர்கள் அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 3:30 pm

ஏறாவூர் இரட்டைப் படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள் ஆறு பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், மட்டக்களப்பு மேலதிக நீதவான் எம். ஐ. எம். ரிஸ்வி முன்னிலையில் இந்த கொலைச் சம்பவத்தின் சந்தேநபர்கள் 6 பேரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏறாவூர் – முகாந்திரம் வீதியிலுள்ள வீடொன்றினுள் 56 வயதான என்.எம்.சித்தி உஸைரா மற்றும் அவரது மகளான 32 வயதான ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் பொல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்