இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார் ரங்கன ஹேரத்

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார் ரங்கன ஹேரத்

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார் ரங்கன ஹேரத்

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 4:16 pm

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை ரங்கன ஹேரத் வழிநடத்தவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் நிமோனியா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சந்திமாலுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கை அணியை ரங்கன ஹேரத் வழிநடத்துவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.

ரங்கன ஹேரத் தலைமையில் இலங்கை அணி 04 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.

அவற்றில் 03 போட்டிகளில் வெற்றியும் ஒருபோட்டியில் தோல்வியையும் இலங்கை அணி எதிர்கொண்டது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்