வட மத்திய மாகாண சபையில் கைகலப்பு: ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக முறைப்பாடு

வட மத்திய மாகாண சபையில் கைகலப்பு: ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக முறைப்பாடு

வட மத்திய மாகாண சபையில் கைகலப்பு: ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2017 | 7:57 am

வட மத்திய மாகாண சபையில் ஏற்பட்ட அமைதின்மையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிவித்து மாகாண சபையின் முன்னாள் தலைவர் ரி.எம்.ஆர்.சிறிபால அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு எதிராக சபைத் தலைவர் பி.எம்.ஆர். சிறிபால அனுமதி வழங்காதமையிட்டு சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் வட மாகாண சபைத் தலைவர் பதவியிலிருந்து ரி.எம்.ஆர்.சிறிபால நீக்கப்பட்டார்.

இதன்பிரகாரம் புதிய தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் வட மத்திய மாகாண சபையின் உறுப்பினர் டி.எம்.அமரதுங்க பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்