நல்ல கதையும் கதாப்பாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்: சௌந்தர்யா ரஜினிகாந்த்

நல்ல கதையும் கதாப்பாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்: சௌந்தர்யா ரஜினிகாந்த்

நல்ல கதையும் கதாப்பாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்: சௌந்தர்யா ரஜினிகாந்த்

எழுத்தாளர் Bella Dalima

19 Jul, 2017 | 5:22 pm

நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நிச்சயம் நடிப்பேன் என ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

[quote]வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளேன். இதில் தனுஷ், அமலாபால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பிரதிபலிக்கும் வலுவான கதாப்பாத்திரத்தில் கஜோல் வருகிறார். அவர் பெரிய நடிகையாக இருந்தாலும் படப்பிடிப்பில் இனிமையாகவே பழகினார்[/quote]

என சௌந்தர்யா கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

[quote]அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி படத்தை இயக்க விரும்புகிறேன். புதிதாக சினிமாவுக்கு வரும் பெண் இயக்குனர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு துறைகளிலும் பெண்கள் அதிகம் வரவேண்டும். கமல்ஹாசன் மகள்கள் இருவரும் சினிமாவில் நடிக்கிறார்கள். எனக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கதையும் கதாப்பாத்திரமும் அமைந்தால் சினிமாவில் நிச்சயம் நடிப்பேன்.[/quote]

என சௌந்தர்யா கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்