மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நாய்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நாய்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2017 | 4:06 pm

பல்கலைக்கழகத்தினுள் இருந்த நாய்களை அடையாளந் தெரியாத சிலர் கொலை செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நாய்களின் காணொளிகளும் நிழற்படங்களும் சமுக வலை தளங்களூடாக இந்நாட்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தனக்கும் அறியக் கிடைத்துள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன நியூஸ்பெஸ்ட்டுக்குக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் மாணவர்களைப் போன்று மிருகங்கள் தொடர்பில் கரிசணைக் காட்டும் பலரும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்