தொடர் எதிர்ப்புகள் காரணமாக ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் பெயர் மாற்றம்

தொடர் எதிர்ப்புகள் காரணமாக ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் பெயர் மாற்றம்

தொடர் எதிர்ப்புகள் காரணமாக ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் பெயர் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2017 | 10:59 am

தொடர் புகார்கள் எதிரொலியாக ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் பெயரை மாற்றம் செய்வதாக படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் அறிவித்திருக்கிறார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

இயக்குனர் ரமேஷ் செல்வன் இந்த படத்தை இயக்குகின்றார், படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற தலைப்பில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கொலை செய்யப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், டி.ஜி.பி. அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில் சந்தான கோபாலகிருஷ்ணன் சென்னை பொலிஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புதிய முறைப்பாட்டு மனுவொன்றை கொடுத்தார்.

அதில், ‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற படத்தின் தலைப்பை `நுங்கம்பாக்கம்’ என மாற்றியுள்ளதாக இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் படத்தில் நடித்து வரும் கதாப்பாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்