தென்னிந்திய நடிகை கடத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் கைது

தென்னிந்திய நடிகை கடத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் கைது

தென்னிந்திய நடிகை கடத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் கைது

எழுத்தாளர் Bella Dalima

11 Jul, 2017 | 4:07 pm

காரில் பயணம் செய்து கொண்டிருந்த தென்னிந்திய நடிகை ஒருவர் கொச்சியில் கடத்தப்பட்டு, பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுனில் என்பவர் அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

முன்னதாக, இந்த வழக்கில் குறித்த நடிகையின் கார் சாரதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளில் மேலும் சிலர் கைதாகக்கூடும் என கேரளப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் நடிகை கடத்தப்பட்டு, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதையடுத்து, திரையுலகினர் பலர் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இந்தக் கடத்தலுடன், மலையாள நடிகர் திலீப் தொடர்புபட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்த போதும், அவர் அதை மறுத்து வந்தார்.

இந்நிலையிலேயே, அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்