கல்குடாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

கல்குடாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2017 | 9:22 pm

கல்குடாவில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் சந்தேகநபர்கள் இருவரும் வாழைச்சேனை நீதவான் ஏ.சீ. றிஸ்வான் முன்னிலையில் இன்று (10) ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி அங்கிருந்த சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

நியூஸ்பெஸ்ட்டின் மட்டக்களப்பு பிராந்திய செய்தியாளர் நல்லதம்பி நித்தியானந்தன், வீரகேசரி பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.

அத்துடன், சுமார் 6 கிலோமீற்றர் வரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்