4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2017 | 3:43 pm

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பிற நிறுவனங்களில் நடப்பதைப் போன்று தான் தமது நிறுவனத்திலும் மாற்றங்கள் நடந்து வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அமெரிக்காவைத் தவிர்த்து பிற நாடுகளில் 121,000 பேர் பணியாற்றுகின்றனர். அமெரிக்காவில் சுமார் 71,000 பேர் பணியாற்றுகின்றனர். இதில் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள ஊழியர்களைத்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

H1B விசா மூலம் அதிகப் பணியாளர்களை அமெரிக்காவிற்கு வரவழைக்கும் நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட் முதலிடம் வகிக்கின்றது.

எனவே, வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த முடிவால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்