இலங்கைக்கு எதிரான 4 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி: 4 விக்கெட்டுகளால் சிம்பாப்வே வெற்றி

இலங்கைக்கு எதிரான 4 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி: 4 விக்கெட்டுகளால் சிம்பாப்வே வெற்றி

இலங்கைக்கு எதிரான 4 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி: 4 விக்கெட்டுகளால் சிம்பாப்வே வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2017 | 8:43 pm

இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்பே அணி 4 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தற்போது தலா 2 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ள நிலையில், தொடர் சமநிலை பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தப் போட்டியில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரொன்றில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 200 ஓட்டங்களுக்கு மேல் பகிர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி என்ற சிறப்பை தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் பெற்றனர்.

நிரோஷன் திக்வெல்ல 116 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக்க 87 ஓட்டங்களையும் பெற்று அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தினர்.

301 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சிம்பாப்வே 21 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது.

இதனடிப்படையில், Duckworth–Lewis முறைப்படி சிம்பாப்வே அணியின் வெற்றி இலக்கு 31 ஓவர்களில் 219 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

மீண்டும் களமிறங்கிய சிம்பாப்வே அணி மேலதிகமாக 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.

இறுதி வரை களத்தில் நின்ற கிரேக் எர்வின் 08 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 69 ஓட்டங்களைப் பெற்று சிம்பாப்வே அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இரு அணிகளுக்குமிடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (10) ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்