வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு

வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு

வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2017 | 7:26 pm

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரான ஸ்ரீ கஜன் வெளிநாடு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் ஒன்பதாம் இலக்க சந்தேகநபரான சுவிஸ் குமாரை வாகனத்தில் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு குறித்த உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அழைத்துச் சென்றதாக வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர், தனிப்பட்ட தேவைக்காக சென்னை செல்வதற்காக நேற்று (07) விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

இதன்போது அவரை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திருப்பி அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாடு செல்வதற்காக முறையான அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

எனினும், அவர் விடுமுறை பெற்றிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஸ்ரீ கஜன் என்ற இந்த பொலிஸ் அதிகாரியிடம் சுவிஸ் குமார் அவரது குடும்பத்தாருடன் சரணடைந்ததாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்