மெக்சிக்கோ சிறைச்சாலையில் கைதிகளிடையே கலவரம்: 28 பேர் உயிரிழப்பு

மெக்சிக்கோ சிறைச்சாலையில் கைதிகளிடையே கலவரம்: 28 பேர் உயிரிழப்பு

மெக்சிக்கோ சிறைச்சாலையில் கைதிகளிடையே கலவரம்: 28 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2017 | 4:14 pm

மெக்சிக்கோ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிக்கோவில் உள்ள லாஸ் குரூசஸ் மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை (07) அதிகாலை கைதிகளுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலையினுள் இரண்டு குழுவினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த பகையே மோதலுக்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தில் இரு தரப்பையும் சேர்ந்த 28 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மோதலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறை அதிகாரிகள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மான்டெர்ரியில் உள்ள டோப்போ சிக்கோ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 49 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்