முதன்முறையாக செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது கானா

முதன்முறையாக செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது கானா

முதன்முறையாக செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது கானா

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2017 | 5:23 pm

அட்லாண்டிக் கடலிலுள்ள மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடான கானா முதன்முறையாக வெற்றிகரமாக செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

Ghanasat-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளை கொஃபோரிடுவாவில் உள்ள ‘சர்வதேச நாடுகள்’ பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்துள்ளனர்.

இது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் 50,000 டொலர்கள் செலவில் 2 வருடங்களாக உருவாக்கப்பட்டது.

இதற்கு ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஜாசா’ உதவி செய்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் மூலம் கானா நாட்டின் கடற்கரைப் பகுதியை கண்காணிக்க முடியும் எனவும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு இது உதவும் எனவும் அந்நாடு நம்புகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்