மீனவர்களுக்கு தண்டனை: இலங்கையின் சட்டம் ஏற்புடையது அல்ல – தமிழக மீன்வளத்துறை அமைச்சர்

மீனவர்களுக்கு தண்டனை: இலங்கையின் சட்டம் ஏற்புடையது அல்ல – தமிழக மீன்வளத்துறை அமைச்சர்

மீனவர்களுக்கு தண்டனை: இலங்கையின் சட்டம் ஏற்புடையது அல்ல – தமிழக மீன்வளத்துறை அமைச்சர்

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2017 | 6:49 pm

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஏற்புடையது அல்லவென தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் (07) நேற்று திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்டமையே தமிழக மீனவர் பிரச்சினைக்குக் காரணம் எனவும் அமைச்சர் டி.ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 143 படகுகளையும் 50 மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் எனவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்