பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்: தமிழக முதலமைச்சர்

பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்: தமிழக முதலமைச்சர்

பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்: தமிழக முதலமைச்சர்

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2017 | 4:46 pm

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, “மதிப்பிற்குரிய பேரறிவாளனை பரோலில் அனுப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 10 ஆண்டுகளை சிறையில் கழித்த கைதிகளை விடுதலை செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இவர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீதிமன்றம் இரத்து செய்த பிறகு, அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், அதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால், அவரை சிறை விடுப்பில் வெளிவிட வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் கோரி வருகிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்