உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரதமர் கருத்து

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரதமர் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2017 | 9:29 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஜயஶ்ரீ மாபோதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவர் பின்வருமாறு கருத்து வெளியிட்டார்.

[quote]அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையே தயாரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்ததன் பின்னர் பிரதான அறிக்கை தயாரிக்கப்பட்டு, சட்டமூலம் வகுக்கப்பட்டது. புதிய பிரேரணை ஒன்றை முன்வைக்க நானும் எண்ணியுள்ளேன். அரசாங்கம் தலையிட்டு மத ரீதியான அமைப்பு ஒன்றின் யாப்பை மாற்ற முடியாது. அதன் அமைப்பை மாற்ற முடியாது. பௌத்த சமயத்தின் அனைத்து பீடங்களினதும் அமைப்பை மாற்ற முடியாது. யாப்பை மாற்ற முடியாது என நான் பிரேரணை கொண்டுவருகின்றேன். இல்லாவிட்டால், புத்த சமயத்திற்கு எப்போது பாதிப்பு ஏற்பட்டாலும் நாம் மகாசங்கத்தினருடன் கதைத்தோம். மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரருடனும் கதைத்தோம். இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உங்களது ஒத்துழைப்பும் கிடைக்கும் என நினைக்கின்றேன். பௌத்த சமயத்திற்கு இருக்கும் ஆபத்துக்களை நாம் இவ்வாறே ஒழிக்க வேண்டும்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்