முறிகள் விநியோகம்: சாட்சியாளருக்கு அர்ஜூன் அலோசியஸ் தொலைபேசி அழைப்பு; ஆராயுமாறு கோரிக்கை

முறிகள் விநியோகம்: சாட்சியாளருக்கு அர்ஜூன் அலோசியஸ் தொலைபேசி அழைப்பு; ஆராயுமாறு கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2017 | 5:02 pm

சர்ச்சைக்குரிய முறிகள் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்கு முன்னர், சாட்சியாளர் ஒருவருக்கு அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிமல் பெரேரா ஆகியோர் தொலைபேசியூடாக அழைப்பு ஏற்படுத்தியமை தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு சட்ட மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அழைப்பினூடாக சாட்சியாளரை அச்சுறுத்தியிருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் ஏசியா வங்கி கூட்டுத்தாபனத்தின் பிரதி பொது முகாமையாளர் இன்றைய தினம் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய போதே ஆணைக்குழு இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

பான் ஏசியா வங்கியிலிருந்து வெளியேற நேரிட்டால், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் தொழில்வாய்ப்பினை வழங்குவதற்கு தயார் என அலோசியஸ் தெரிவித்ததாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அலோசியஸை சந்தித்தது ஏன் என சாட்சியாளரிடம் ஆணைக்குழு வினவியபோது, முன்னாள் தலைவர் நிமல் பெரேரா, அலோசியஸிடம் ஏதும் தெரிவித்திருந்தாரா என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்கான தேவை தமக்கு இருந்ததாக சாட்சியாளர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்