முதல் சந்திப்பு: ட்ரம்பும் புதினும் கை குலுக்கி மகிழ்ச்சிப் பரிமாற்றம்

முதல் சந்திப்பு: ட்ரம்பும் புதினும் கை குலுக்கி மகிழ்ச்சிப் பரிமாற்றம்

முதல் சந்திப்பு: ட்ரம்பும் புதினும் கை குலுக்கி மகிழ்ச்சிப் பரிமாற்றம்

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2017 | 5:58 pm

G20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துக் கை குலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.

விரைவில் இருவரும் தனியாக சந்தித்து இருநாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ள நிலையில், இன்று இருவருக்கும் இடையில் நிகழ்ந்த இந்த முதல் சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் G20 மாநாடு இன்று ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உட்பட பலநாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மேர்கல் மாநாட்டை ஆரம்பித்து வைத்துள்ளார்.

உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்