பெட்ரோல், டீசல் கார் விற்பனையை தடைசெய்யவுள்ளது பிரான்ஸ்

பெட்ரோல், டீசல் கார் விற்பனையை தடைசெய்யவுள்ளது பிரான்ஸ்

பெட்ரோல், டீசல் கார் விற்பனையை தடைசெய்யவுள்ளது பிரான்ஸ்

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2017 | 5:37 pm

2040 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோல் அல்லது டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும் கார் விற்பனையை பிரான்ஸ் தடைசெய்யவுள்ளது.

இதனை ஒரு மாபெரும் புரட்சியென பிரான்ஸின் சூழலியல்துறை அமைச்சர் நிக்கோலஸ் ஹுயுலோ சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான திட்டமிடப்பட்ட தடையை நிக்கோலஸ் ஹுயுலோ அறிவித்துள்ளார்.

2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இல்லாத நாடாக பிரான்ஸை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸில் ஹைபிரிட் கார்களின் சந்தை விற்பனை 3.5% ஆக உள்ளது. அதில், வெறும் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தும் கார்களின் சந்தை விற்பனை 1.2% ஆக உள்ளது.

தற்போது பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை, 2040 ஆம் ஆண்டிற்குப் பின்னர் என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

ஒரு மூத்த சுற்றுச்சூழல் பிரசாரகரான ஹுயுலோ, புதிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனால் சூழலியல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்துள்ள மக்ரோன், பூமியை மீண்டும் சிறப்பாக்க டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்