இறக்குமதியாகும் அரிசியுடன் உள்நாட்டு அரிசி கலப்படம்

இறக்குமதியாகும் அரிசியுடன் உள்நாட்டு அரிசி கலப்படம்

இறக்குமதியாகும் அரிசியுடன் உள்நாட்டு அரிசி கலப்படம்

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2017 | 3:54 pm

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியுடன் இலங்கையில் உற்பத்தியாகும் அரிசியை கலப்படம் செய்து விற்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாத்தளை மற்றும் கண்டியில் இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்தது.

மாத்தளையில் 1700 கிலோகிராம் கலப்படம் செய்யப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரட்ண கூறினார்.

அரிசி கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுமானால் உடனடியாக அறிவிக்குமாறு அதிகார சபையின் தலைவர் கேட்டுக்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்