நாடளாவிய ரீதியில் இலங்கை நிர்வாக சேவையில் 605 வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் இலங்கை நிர்வாக சேவையில் 605 வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் இலங்கை நிர்வாக சேவையில் 605 வெற்றிடங்கள்

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2017 | 3:44 pm

நாடளாவிய ரீதியில் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான 605 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

இதன் காரணமாக, சில துறைகளில் அரச சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் நிலவுவதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டார்.

இலங்கை நிர்வாக சேவையில் நிலவும் வெற்றிடங்களை இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி செய்து புதிய உத்தியோகத்தர்களை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் 138 பேர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்