இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2017 | 3:32 pm

இலங்கை – இந்திய மீனவர்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 இந்திய மீனவர்களையும் அவர்களின் 143 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொள்ளாமல், ஒருதலைப்பட்சமாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களின் உரிமை விடயத்தில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது எனவும் தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக் நீரிணை பகுதியில் பாரம்பரிய தொழிலை செய்ய தமிழக மீனவர்களுக்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசிற்கு இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்