ஊடகங்களைத் தண்டிக்கும் ஆவணத்திற்கு இணங்கவில்லை: ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

ஊடகங்களைத் தண்டிக்கும் ஆவணத்திற்கு இணங்கவில்லை: ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2017 | 9:05 pm

ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக்கூடிய புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கான வசதிகளை ஏற்படுத்தும் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக கடந்த சில தினங்களாக நியூஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த ஆவணம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச செய்திப் பணிப்பாளர் நாயகம் நேற்று (05) தெரிவித்தார்.

எனினும், இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அரசாங்கத்தின் சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று தெரிவித்தனர்.

செய்தி ஊடக தர நிர்ணய சுயாதீன பேரவை சட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தில், ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சட்டங்களை வகுப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அந்த பேரவையின் தலைவர் பதவிக்கு ஒய்வுபெற்ற நீதிபதி அல்லது சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனங்களின் எந்தவொரு தகவலையும் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரம் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும்.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டொபி மென்டல் என்பவரும் கலாநிதி பிரதீப் வீரசிங்க என்பவரும் இந்த ஆவணத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், ஊடகங்களைத் தண்டிக்கும் ஆவணத்துடன் தமக்கு இணக்கப்பாடில்லை என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சிலர் தெரிவித்தனர்.

 

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்