சிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இலங்கை முன்னிலை: மூன்றாவது போட்டியில் இலகு வெற்றி

சிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இலங்கை முன்னிலை: மூன்றாவது போட்டியில் இலகு வெற்றி

சிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இலங்கை முன்னிலை: மூன்றாவது போட்டியில் இலகு வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2017 | 7:45 pm

சிம்பாப்வேக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2-1 எனும் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

சிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது.

ஹம்பாந்தோட்டை – சூரியவெவ மைதானத்தில் நடைற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 310 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ஹமில்ட்டன் மஸகட்சா சர்வதேச ஒருநாள் அரங்கில் ஐந்தாவது சதத்தை எட்டினார்.

311 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணிக்கு தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஜோடி இரட்டைச்சத இணைப்பாட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது.

இவர்கள் இருவரும் இணைந்து 216 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்காக பகிர்ந்து இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த இணைப்பாட்டம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களினால் பெறப்பட்ட ஐந்தாவது சிறந்த இணைப்பாட்டமாகும்.

தனுஷ்க குலதிலக்க 11 பவுண்டரிகளுடன் சர்வதேச ஒருநாள் அரங்கில் தன்னுடைய கன்னி சதத்தை எட்டியதுடன், அபாரமாக துடுப்பெடுத்தாடிய நிரோஷன் திக்வெல்லவும் சர்வதேச ஒருநாள் அரங்கில் தன்னுடைய கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.

இதனடிப்படையில், இலங்கை அணி 47.2 ஓவர்களில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-1 எனும் கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நாளை மறுதினம் (08) நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்