மீதொட்டமுல்ல குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம்

மீதொட்டமுல்ல குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2017 | 1:25 pm

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் குப்பைகளை களனிக்கு கொண்டு சென்று அங்கிருந்து ரயில் மூலம் புத்தளத்திற்கு கொண்டு செல்வதற்கு மாநகர சபை மற்றும் மேல்மாகண அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ரயிலில் குப்பைகளைக் கொண்டு செல்வதற்கான, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பகுதியை நிலைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக இராணுவத்தினர், தேசிய கட்டட ஆராச்சி நிறுவனம் உள்ளிட்டவர்களின் உதவியை நாடியுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல்மாகண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்