மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் சந்தைக்குள் நுழைந்த பார ஊர்தியால் 77 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் சந்தைக்குள் நுழைந்த பார ஊர்தியால் 77 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் சந்தைக்குள் நுழைந்த பார ஊர்தியால் 77 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2017 | 4:47 pm

ஆப்பிரிக்கக் குடியரசின் மத்தியில் உள்ள பம்பரி மற்றும் இப்பி பகுதிகளுக்கு இடையே நிகழ்ந்த வீதி விபத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாலோம் பகுதியில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்கச் சென்ற மக்கள் மீது சரக்கு ஏற்றிச் சென்ற, 10 சக்கரங்களைக் கொண்ட பார ஊர்தியொன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பார ஊர்த்தியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கான காரணமென கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த 59 பேரின் சடலங்கள் பம்பரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. 18 பேரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்