பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் முதனிலை வணிக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் முதனிலை வணிக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2017 | 5:36 pm

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வியாபார மற்றும் முதனிலை வணிக நடவடிக்கைகளை இடைநிறுத்த மத்திய வங்கியின் நிதிச் சபை தீர்மானித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழான நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க, 2017 ஜூலை மாதம் 6 ஆம் திகதியான இன்று மாலை 4.30 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைளை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.

ஆறு மாதங்களுக்கு இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்குமென ஊடக அறிக்கையொன்றின் மூலம் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த ஒழுங்கு முறைப்படுத்தல் நடவடிக்கையானது, சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், மத்திய வங்கி தேவையான வழிமுறைகளை மேற்கொள்ளும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களினதும் இணைத் தரப்பினர்களதும் நலவுரித்துகளை ஒழுங்கான விதத்தில் கையாள்வதனை வசதிப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்