புத்தளத்தில் இளம் தாய் எரியூட்டப்பட்டு கொலை: சந்தேகநபரான அவரது கணவருக்கு விளக்கமறியல்

புத்தளத்தில் இளம் தாய் எரியூட்டப்பட்டு கொலை: சந்தேகநபரான அவரது கணவருக்கு விளக்கமறியல்

புத்தளத்தில் இளம் தாய் எரியூட்டப்பட்டு கொலை: சந்தேகநபரான அவரது கணவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2017 | 5:55 pm

புத்தளம், நல்லாந்தொழுவ பகுதியில் இளம் தாயொருவர் எரியூட்டப்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் சந்தேகநபரான அவரது கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான உயிரிழந்த பெண்ணின் கணவர், புத்தளம் நீதவான் லக்மால் விக்ரமசூரிய முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுதவிர, இந்த வழக்கின் சாட்சியாளர்கள் மூவர் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றத்தில் பிரசன்னமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாட்சியாளர்கள் மூவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு புத்தளம் நீதவான் இன்று அழைப்பாணை விடுத்துள்ளார்.

இந்த வழக்கின் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் ஆஜராகியிருந்தார்.

கடந்த மாதம் 5 ஆம் திகதி கணவரால் குறித்த பெண் எரியூட்டப்பட்டு, 14 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்