சம்மாந்துறையில் கஞ்சா தொகையுடன் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

சம்மாந்துறையில் கஞ்சா தொகையுடன் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2017 | 11:22 am

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் கஞ்சா தொகையுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

நேற்று (05) மாலை 7 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நயினாகாடு பகுதியில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபரை இன்று (06) சம்மாந்துரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்