கட்டார் மீதான கட்டுப்பாடுகளை தொடரவுள்ளதாக சவுதி அரேபியா அறிவிப்பு

கட்டார் மீதான கட்டுப்பாடுகளை தொடரவுள்ளதாக சவுதி அரேபியா அறிவிப்பு

கட்டார் மீதான கட்டுப்பாடுகளை தொடரவுள்ளதாக சவுதி அரேபியா அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2017 | 11:55 am

வளைகுடா நாடுகளால் விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையை கட்டார் நிராகரித்தை அடுத்து, அந்நாட்டின் மீதான கட்டுப்பாடுகளை தொடரவுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

கட்டார் விவகாரம் குறித்து நான்கு அரபு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கெய்ரோவில் நேற்று (05) சந்தித்து கலந்துரைாயடியிருந்தனர்.

எனினும் தமது நிபந்தனைகளுக்கு கட்டார் அரசாங்கம் வழங்கிய எதிர்மறையான பதில் வருத்தமளிப்பதாக வளைகுடா நாடுகளின் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தையும் ஆழத்தையும் கட்டார் புரிந்துக்கொள்ளவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன கடந்த மாதம் கட்டார் அரசுடனான உறவுகளை துண்டித்துவிட்டன.

ஜிகாதி குழுக்களுக்கு கட்டார் அரசு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள குறித்த நாடுகள், கட்டாரின் கொள்கைகளில் பெரும் மாற்றங்களைக் கோரியிருந்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்