கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2017 | 6:29 am

நாட்டின் கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, மீனவர்கள் கைது செய்யபப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை காங்கேசன்துறை கடற்பரப்பிற்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணம் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளில் 42 படகுகளை விடுவிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள 81 படகுகளில் 42 படகுகளை விடுவிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டப்ள்யூ.எம்.எம்.ஆர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

படகுகளை தவிர, மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வலைகள் உள்ளிட்ட பொருட்கள் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் கடற்றொழில் அமைச்சு கூறியுள்ளது.

விடுவிக்கப்படவுள்ள படகுகள் தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, மீனவர்கள் கைது செய்யபப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை காங்கேசன்துறை கடற்பரப்பிற்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணம் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளில் 42 படகுகளை விடுவிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாரம் 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள 81 படகுகளில் 42 படகுகளை விடுவிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டப்ள்யூ.எம்.எம்.ஆர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

படகுகளை தவிர, மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வலைகள் உள்ளிட்ட பொருட்கள் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் கடற்றொழில் அமைச்சு கூறியுள்ளது.

விடுவிக்கப்படவுள்ள படகுகள் தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்