எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2017 | 10:56 am

நிலவும் வறட்சியுடனான காலநிலையால், எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும், கொழும்பு வடக்கு பகுதியிலும் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்குவதற்கு 30 இற்கும் அதிகமான பவுசர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு வடக்கு பகுதியிலும், வடமேல் மாகாணத்திலும் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

குடிநீர் பெற்றுக் கொள்ளப்படும் நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்