ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2017 | 12:55 pm

ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார ரயில் தரிப்பிடத்தில் பணியாற்றும் பரிசோதகர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒத்துழைப்புச் சங்க பொருளாளர் காமினி ஜயதிலக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீரவிடம் வினவியபோது, பணிப்பகிஷ்கரிப்பு குறித்து தமக்கு தெரியவரவில்லை என்று கூறினார்.

எனினும், பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்