நாட்டில் மேலும் 6 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

நாட்டில் மேலும் 6 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

நாட்டில் மேலும் 6 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2017 | 7:55 am

புதிதாக 6 அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளாக தம்மைப் பதிவுசெய்வதற்காக 92 கட்சிகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தன.

இவற்றுள் 15 அரசியல் கட்சிகளை இரண்டாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைத்ததன் பின்னர், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம் 86 கட்சிகளின் பதிவு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட 64 அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்